எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது சட்டத்திற்கு முரணானது. அவ்வாறு மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கும் அரசாங்கம் ஏன் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிப்பதில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

0 Responses to மாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது: ருவான் விஜயவர்த்தன