புதிய அமெரிக்க அதிபராகப் பணியாற்றவுள்ள டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் ஐ.நா சபைக்கான அடுத்த அமெரிக்க தூதராகப் பணியாற்ற தெற்கு கரோலினா ஆளுனரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹலேய் என்ற பெண்மணியை டிரம்ப் தேர்வு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் அரசின் கீழ் முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதற் பெண்ணாகவும் நிக்கி ஹலேய் பெருமை பெற்றுள்ளார். இன முரண்பாடுகள் அதிகம் நிலவி வரும் தெற்குக் கரோலினாவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நிக்கி ஹலேய் 2 ஆவது முறையாகவும் ஆளுனராகப் பதவி வகித்து வருகின்றார். ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதற்கு இவர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நிக்கி ஹலேயின் பூர்விகமான பஞ்சாபில் நிக்கி ஹலேய் ஐ.நா தூதராக தேர்ந்தெடுக்கப் பட்டதை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் நிக்கி ஹலேயின் உறவினர்களும் குடும்ப நண்பர்களும் கலந்து கொள்வர் எனவும் தெரிய வருகின்றது. இதேவேளை அமெரிக்க அரச நிர்வாகத்தில் நிக்கி முக்கிய பதவி வகிப்பதால் அமெரிக்க இந்திய அரசியல் உறவு இன்னும் வலுப்படும் என எதிர்பார்க்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ.நாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹலேய் தேர்வு