கடந்த சில நாட்களாக வன்முறை காரணமாக மியான்மாரில் இருந்து ஆயிரக் கணக்கான சிறுபான்மை றோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அகதிகளில் பலர் குழுவாகக் கற்பழிக்கப் படல், சித்திரவதைக்கு ஆளாகுதல் மற்றும் கொலை செய்யப் படுதல் போன்ற அக்கிரமங்களில் இருந்து தப்பிப்பதற்காகவே அகதிகளாகப் பாரிய அளவில் இடம்பெயர முன் வந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மியான்மாரில் இருந்து வன்முறை காரணமாக இதுவரை 30 000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ள நிலையில் இந்த மாதத் தொடக்கத்தில் இந்த அகதிகள் வெளியேறும் சிறிய பாதையை மியான்மார் துருப்புக்கள் ஆக்கிரமித்தும் இருந்தன. இந்த பாரிய மனித அவலத்தைப் போக்க பங்களாதேஷ் தனது எல்லைகளைத் திறந்து வைக்க வேண்டும் என சர்வதேசம் வலியுறுத்தியுள்ள போதும் வங்கதேசம் இதற்கு செவி சாய்க்க மறுத்து வருகின்றது. பதிலுக்கு தனது சிறுபான்மை மக்கள் மீது மியான்மார் அரசு தான் இன்னமும் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
இதேவேளை வெளியாகி வரும் றோஹிங்கியா அகதிகள் சிலரது ஊடகத் தகவல் படி மியான்மார் இராணுவத்தின் கொடூரங்கள் அப்பட்டமாகியுள்ளது. ஒருவரின் கூற்றுப் படி கடந்த சில நாட்களில் மட்டும் 300 றோஹிங்கியா அகதிகள் படுகொலை செய்யப் பட்டதும் மேலும் 300 வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டு பெண்கள் குழுவாக பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் செய்மதித் தகவல் படி ராக்கைன் மாநிலத்தில் ஆயிரக் கணக்கான வீடுகள் எரியூட்டப் பட்டது தெரிய வந்துள்ள போதும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மியான்மார் இராணுவம் மறுத்துரைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to மியான்மார் வன்முறையில் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றம்