Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

அமைச்சராக பதவி வகித்த போது ஜனாதிபதி செயலக மற்றும் தமது அமைச்சுக்கு சொந்தமான 40 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவினால் விமல் வீரவங்ச நேற்று திங்கட்கிழமையும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

நேற்று காலை 09.30 மணிக்கு விசாரணைக்கு வந்த அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த மாதம் இரு தினங்கள் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இரு நாட்கள் விசாரணைக்கு வராத அவர் நேற்று காலை விசாரணைக்கு சமுகமளித்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், “போயா தினத்தில் எம்மை விசாரணைக்கு அழைத்து எம்மை மானசீக ரீதியாக வீழ்த்த அரசாங்கம் முயல்கிறது. பழிவாங்கல்களில் ஊறிப்போயுள்ள அரசாங்கம் கலாசார ரீதியில் இந்த நாளின் முக்கியத்தை அறியாதுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) போட்டியிடும்: விமல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com