நாடாளுமன்றத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்துக்கொண்டு இருக்கும் நிலையில்,
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் அறிவித்ததுத் தொடர்பாக பிரதமருடன் விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் கடந்த மூன்று தினங்களாக அமளியை ஏற்படுத்தி, மக்களவையை முடக்கி வருகின்றன. இன்றும் பிரதமர் மக்களவைக்கு வராத நிலையில், பிரதமர் அவைக்கு வர வேண்டும், அவருடன் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
மோடி மக்களுக்கு சிரமம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்றும், நாடாளுமன்றத்தைத் தவிர அனைத்து இடங்களிலும் மோடி பேசுகிறார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார் ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் பிரதமர் அவைக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டதால், அவை இன்றும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

0 Responses to நாடாளுமன்றத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மோடி பேசுகிறார்: ராகுல்