தமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாள். (1982)
இன்று தழீழத்தின் தேசிய நாள். தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு, உரமிட்ட மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலிவீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைக் பிளந்து அந்த வீரர்களை புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களை புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.
தமிழீழ தேசியத் தலைவர்.

0 Responses to தமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாள்.