குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் வந்த போதிலும் நாட்டு மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பாணந்துறையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாவது, “அரசியல்வாதிகள் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் இல்லாத நபர்களாக மாறவேண்டும். நாட்டையும் மக்களையும் நேசிக்கும், நாட்டை கட்டியெழுப்பும் தூய்மையான எண்ணமுடைய எவரும் மக்கள் பணத்தையும் அரச வளங்களையும் தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்த முடியாது.
பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கி நியாயமான சமூகத்தை உருவாக்குதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையாகும். அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் தேசிய திட்டத்தோடு இணைந்ததாக 09 மாகாணங்களிலுமுள்ள கிராமப்புற மக்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை வழங்கி அவர்களது நலனுக்காக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை: மைத்திரி