தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் மாவீரர் தினம் இன்று (நவம்பர் 27) அனுஷ்டிக்கப்படுகின்றது.
வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகவும், அமைதியாகவும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் கற்பூரம் கொழுத்தி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூரல் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

0 Responses to மாவீரர் தினம் இன்று; தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!