நாட்டின் அரச சேவையானது முகாமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் மனித வளத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “அரச நிறுவனங்கள் சுமார் ஒரு மாதத்தில் எடுக்கும் முடிவுகளையும் தீர்மானங்களையும் தனியார் நிறுவனங்கள் ஒரே நாளில் எடுக்கின்றன. காலம் கடந்து போன அரச சேவை சட்ட திட்டங்களில் சிக்கியிருக்கும் ஊழியர்களை அதில் இருந்து அகற்றி வலுவான அரச சேவையை உருவாக்க தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்றுள்ளார்.

0 Responses to முகாமைத்துவ ரீதியாக அரச சேவை பலவீனமடைந்துள்ளது: ராஜித சேனாரத்ன