வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு மற்றும் அது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஆகியன தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது “விசாரணையை மேற்கொள்வதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவிற்கான அனுமதியினை வழங்குமாறும், இதற்கான நிதி அனுமதியும் என்னிடம் கோரப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினையும் அங்கு மேற்கொள்ள வேண்டியுள்ள விசாரணைகளின் விபரங்களையும் அனுப்பிவைக்குமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு எழுதிய கடிதம் எழுதியுள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் ஆளுநர் விபரம் கோரல்!