தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது எழுக தமிழ் பேரணி எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடத்தப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வைத்தியர் பூ.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘வடக்கு- தெற்கிற்கான உரையாடல்’ என்ற தொனிப் பொருளில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும் நிர்பந்தங்களாலும் அழுத்தங்களாலும் எமது மக்களின் நீதிக்கான பயணம் மழுங்கடிக்கப்படலாம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக நிலவி வந்தது. எனவே அதனைத்தடுக்கும் வகையில் விழிப்புணர்வு செயற்பாடொன்றின் அவசியம் உணரப்பட்டது.
அதனால்தான் கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி யாழ். நகரில் ‘எழுக தமிழ்’ பேரணி நடத்தப்பட்டது. எனவே மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் வெளிக்கொண்டுவந்து அதற்கு தீர்வு காணும் நோக்கில் இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணியை எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் ஜனவரி மாதம்!