அமெரிக்காவில் உயர் கல்வி கற்று வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதுடன் கடந்த வருடத்தை விட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 69 000 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 7.1% வீதம் அதிகமாகும். மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 85% வீதமான அதிக வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கல்வி கற்று வருவதாகக் கூறப்படுகின்றது. அமெரிக்காவில் தற்போது உயர் கல்வி கற்று வரும் அந்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 20 மில்லியனாக இருக்கும் நிலையில் அங்கு கல்வி கற்று வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 043 839 ஆகும். இந்த எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையின் 5% வீதமாகும்.
அமெரிக்காவில் கல்வி கற்று வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அதற்கு அடுத்த கட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும் உள்ளனர். மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 53% வீதமானவர்கள் சீனா, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதல் 25 இடங்களுக்குள் சீனா, இந்தியா, சவுதி அரேபியா, வியட்நாம், தாய்வான், ஈரான், பிரிட்டன், நேபால், நைஜீரியா, குவைத், பிரான்ஸ், இந்தோனேசியா, வெனிசுலா, மலேசியா, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.

0 Responses to அமெரிக்காவில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேல்