இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்டு வரும் துரித கண்காணிப்பு நடவடிக்கைகளினால் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் வருகை 50 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை இந்திய, இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாலேயே இவர்களின் அத்துமீறல் குறைந்திருப்பதாக கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக வாரத்தில் 03 நாட்களாவது இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால்இலங்கைக்கு சொந்தமான 600 மெட்ரிக் தொன் மீன்கள் இந்திய மீனவர்களால் பிடிக்கப்பட்டன. இது இலங்கையின் மீன்பிடித் துறைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தது.
இதையடுத்து அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் சுமார் 114 வரை இலங்கையின் பொறுப்பில் இருப்பதாகவும் ஒரு போதும் அவற்றை விடுவிக்கப் போவதில்லை என்றும் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் இலங்கை மீனவர்களுக்கு எதிர்காலத்தில் பெருமளவு மீன்களை பிடிப்பதற்கு முடியுமான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இந்திய மீனவர்களின் அத்துமீறல் 50 வீதம் குறைவு: கடற்றொழில் அமைச்சு