சிரியாவில் அண்மையில் மேற்கொள்ளப் பட்ட வான் தாக்குதலில் அலெப்போவின் கோமாளி (clown of Aleppo) என அறியப் படும் சிறுவர் நல சமூக ஆர்வலரான 24 வயதே ஆகும் அனல் அல் பாஷா என்பவர் பலியாகி உள்ளார்.
சிரியாவின் நம்பிக்கைக்கான பொதுமக்கள் சமூகக் குழுவின் மத்திய இயக்குனரான இவர் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் போரினால் காயமுற்று அனுமதிக்கப் படும் சிறுவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மீட்டெடுப்பதற்குக் கடும் முயற்சி மேற்கொண்டு வந்தவர் ஆவார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அலெப்போவில் சிரிய ரஷ்ய கூட்டுப் படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் இவர் பலியானதாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. கிழக்கு அலெப்போவில் கடுமையான போர் காரணமாக 10 000 கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் இன்னமும் 250 000 பேர் உள்ளே சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க முன்னர் அலெப்போவை கிளர்ச்சிப் படையினரிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு சிரியா முனைப்புடன் போரிடுவதாக டமஸ்கஸ்ஸின் முன்னால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மிகத் தீவிரமான வான் தாக்குதல்களால் அலெப்போவில் பொது மக்கள் பலி எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதால் சுமார் 16 000 பொது மக்கள் வரை கட்டாயத்தின் அடிப்படையில் இடம்பெயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரிய வான் தாக்குதலில் அலெப்போவின் சிறுவர் நல ஆர்வலர் பலி