மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவர்களான றோஹிங்கியா மக்கள் மீது அந்நாட்டு அரசு மற்றும் இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை விசாரிக்க மியான்மார் அரசு அண்மையில் அமைத்த விசாரணைக் குழு நம்பகத் தன்மை அற்றது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய இந்த ராக்கைன் மாநிலத்தின் நிலமையைக் கண்டறிய முன்னால் ஐ.நா பொதுச் செயலாளரான கோஃபி அனான் விஜயம் செய்துள்ள நிலையில் இந்த விமர்சனம் முன் வைக்கப் பட்டுள்ளது. இப்பகுதியில் இராணுவத்தினரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மியான்மாரின் அரச தலைவரான ஆங் சான் சூ குய் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என சர்வதேசம் குற்றம் சுமத்தியுள்ளது.
ராக்கைன் மாநிலத்தில் மதப்பிரிவினை காரணமாக 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில் 100 இற்கும் அதிகமான றோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். மேலும் கடந்த சில வாரங்களில் மட்டும் 10 000 கணக்கான றோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு அகதிகளாகத் தஞ்சம் கோரி சென்றிருப்பதாக புதன்கிழமை ஐ.நா சபை உறுதிப் படுத்தியுள்ளது. இவ்வாறு சென்ற சில அகதிகளின் வாக்குமூலப் படி ராக்கைன் மாநிலத்தில் கொலை, சித்திரவதை மற்றும் குழு பாலியல் வன்முறை ஆகிய கொடுமைகளுக்கு அவர்கள் உள்ளானது தெரிய வந்துள்ளது.

0 Responses to மியான்மார் அரசின் ராக்கைன் மனிதாபிமான விசாரணைக் குழு நம்பகத் தன்மை அற்றது : மனித உரிமை ஆர்வலர்கள்