வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்?, என்பது தொடர்பிலான சர்ச்சைக்கு எதிர்வரும் 6ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா தற்போது பதவி வகித்து வருகிறார். அவரை வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அதில், எஸ்.தவராசாவை வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கி கிளிநொச்சி மாவட்டத்தின் வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்துவரும் கு.தவநாதனை நியமிக்குமாறு கோரப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்துக்கு கு.தவநாதனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரும் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசாவையும் கு.தவநாதனையும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைத்து பேச்சு நடத்தியதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான முடிவு வருகின்ற 6ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

0 Responses to வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்?