மேற்கு வங்க தலைமைச்செயலகத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டுக்கு செல்லாமல் உள்ளிறுப்புப் போராடட்ம நடத்தினார்.
மம்தா பானர்ஜி சென்ற விமானம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கொல்கத்தாவில் தரையிறக்கம் செய்யப்பட்டது. இது மம்தாவை கொல்ல சதி என்றும், மத்திய அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி விடிய விடிய வீட்டுக்கு செல்லாமல் இருந்தார்.நள்ளிரவு வரை தமது ட்வீட்டர் வலைத் தளத்தில் ராணுவத்தையும் மத்திய அரசையும் சாடியபடியே இருந்தார்..
ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் வரை தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என உறுதிபட தெரிவித்த அவர், மத்திய அரசு நேற்று நள்ளிரவில் ராணுவத்தை திரும்பப் பெற்ற பிறகே வீடு சென்றார்.

0 Responses to மேற்கு வங்க தலைமைச்செயலகத்தில் ராணுவம் குவிப்பு: எதிர்ப்பு தெரிவித்து மம்தா உள்ளிருப்பு போராட்டம்