தமிழ்நாட்டின் 19வது முதலமைச்சர் ஜெயயலலிதா. முன்னதாக 11வது, 14வது, 16வது மற்றும் 18 வது முதலமைச்சர் என நான்கு முறை முதலமைச்சரவாக இருந்தவர். தமிழ்நாட்டின் சனத்தொகை 72 மில்லியனுக்கு மேல். அம்மாநிலத்தில் அதிக இலவசங்களை வழங்கியதில் இந்திய அளவில் ஜெயலலிதா போன்று எம்மாநில முதலமைச்சரும் சாதனை படைத்ததில்லை.
அதோடு சமூகம், குற்றவியல், கைத்தொழில் குறிகாட்டிகளில் தமிழ்நாட்டை முன்னுதாரண மாநிலங்களில் ஒன்றாக மாற்றிய பெருமையையும் ஜெயயலலிதாவுக்கு உண்டு.
இந்தியாவில் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஆஸ்திரேலியா, பின்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளை விட தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் குறைவானது என்பது ஆச்சரியத்தக்கது.
அதோடு பிறந்த குழந்தை இறப்பு விகிதத்திலும், தாய்மார் இறப்பு விகிதத்திலும் இரண்டாவது மிகக் குறைவான புள்ளிவிபரங்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதோடு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்த மாநிலமாகவும், அதிக கைத்தொழில் வாய்ப்புக்களை உருவாக்கித் தரும் மாநிலமாகவும், அதிக கைத்தொழில் நிறுவனங்களை கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.
எனினும் அதிக இலவசங்கள் எனும் நடைமுறையால் கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டின் கடன் தொகை 92 வீதம் உயர்வடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கல்வியில், கடந்த 15 வருடங்களில் தமிழ்நாடு மாநிலம் முன்னெனேற்றம் கண்டுள்ளது.
இப்புள்ளி விபரங்கள் குறித்த சில அட்டவணைகள்.

0 Responses to முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழ்நாடு கண்ட முன்னேற்றமும் வீழ்ச்சியும்!