அரசாங்கத்தினால் தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையேதும் இல்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கமே நாட்டை கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர், “அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் ஆகியன ஆரம்பிக்கப்பட்ட போது கூறப்பட்ட செலவுகளை விடவும் ஒரு மடங்கு அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்தின் வருமானம் கிரமமான முறையில் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.” என்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்திய வங்கியை அரசாங்கம் தனியார் மயப்படுத்த உள்ளதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தேசிய சொத்துக்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை; மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு ரவி பதில்!