Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மார்ச் 1 லிருந்து கோக கோலா பெப்சி போன்ற குளிர் பானங்கள் மற்றும் அதன் உப தயாரிப்புகள் தடை செய்வதாக வணிகர் சங்க பேரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிப்ரவரி 1 முதல் அதற்கான துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படும் MNC கம்பெனிகளின் உணவுகளான கே.எப்.சி, மிக் டொணால்டு போன்றவற்றை உண்ண வேண்டாம் என வேண்டுகோள் தொடர்பில் இல்லாத வணிகர்களுக்கும் கடையை நம்பி மட்டுமே பிழைக்கும் ஏழை கடைகாரர்களுக்கும் இத்தகவலை வாய்வழியாக தெரிவிக்குமாறு வேண்டுகோள்.

இந்த முயற்சி பலமுறை தோல்வி அடைந்து மாணவர்கள் இளைஞர்கள் கையில் எடுத்து போராடியதன் காரணமாகவும் பல மாணவ அமைப்புகள் விடுத்த தொடர் கோரிக்கை காரணமாவும் மீண்டும் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளோம். வணிக பிரதிநிதிகள் அனைவரும் கூடி இம்முடிவை அமைப்பு சட்டரீதியாக முடிவு இறுதிப்படுத்தப்பட்டது.

மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க எங்களது முடிவிற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மாணவர்களையும் மக்களையும் நம்பி MNC கம்பெனிகளை பகைத்து இம்முடிவை எடுத்துள்ளோம். இதன்மூலம் பல விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய நிலங்கள் பேணப்படும். வறட்சியின் பிடி தளரும். விலைவாசி கட்டுக்குள் வரும். ஊக்கம் தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

0 Responses to மார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மற்றும் உப தயாரிப்புகளுக்கு தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com