ஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும் என்று ஓட்டுக்கு பணம் வாங்குவதுக் குறித்த செயலுக்கு கருத்து தெரிவிக்கையில் சரத் யாதவ் கூறியுள்ளார்.
ஓட்டுக்குப் பணம் கொடுத்தால், வாங்கக்கூடாது என்பதை நாட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஏனென்றால், ஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும். நமது மகள் அல்லது ஒரு பெண் கற்பிழந்தால், அவள் சார்ந்த சமூகம் மற்றும் ஊர் என அனைவரின் மரியாதை பாதிக்கப்படும் அதேசமயம், வாக்குகளை விற்பதன் மூலம் வாக்குரிமைக்கு களங்கம் ஏற்படுவது என்பது ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும் என்றார் அவர்.
சரத் யாதவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர்
வாக்குரிமையின் மேன்மையை உணர்த்துவதற்காகவே அவ்வாறு கூறினேன் என்றார். பெண்களை அவமதிக்கும் வகையில் சரத் யாதவ் பேசியதற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0 Responses to ஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும்: சரத் யாதவ்