Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேசத்தின் சமாதான சமிக்கைகளுடன் தமிழீழம் நோக்கி எம்.பி. அகாத் கப்பலில் சென்று கொண்டிருக்கும்போது சர்வதேசக் கடலில் வைத்து இந்திய தேசத்தின் கடற்படையினரால் அந்த அரசின் நம்பிக்கைத் துரோகத்தனத்தால் 1993.01.16 அன்று, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உயரிய குறிக்கோள்களில் ஒன்றான எதிரியிடமும், எதிரியானவனிடமும் உயிருடன் பிடிபட்டு அடிபணியக்கூடாது என்பதற்கமையவும், இந்திய தேசத்தின் ஆட்சிஅதிகார வர்க்கங்கள், தமிழ்மக்கள் சார்பில் உள்ள இரட்டை நிலைப்பாட்டினையும் சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தவும் பல்வேறு போராட்டத்திற்குப் பின்பு அவை பயனளிக்காத நிலையில் தமது கப்பலினை வெடிவைத்து தகர்த்து வங்கக்கடலிலே தனது ஒன்பது சகதோழர்களுடன் வீரமரணத்தை தழுவிக்கொண்ட வீரமறவர்களின் 24 வருடத்தின் நினைவுகளையும், 2009ல் தமிழீழ மக்களாகிய எமது சகோதரர்களை சிங்கள அரசின் வெறியர்களின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றக்கோரி இந்திய மத்திய மாநில அரசிடம் நீதி கேட்டு தன்னைத்தானே தியாகத்தீயினில் தீக்கிரையாக்கி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட வீரத்தமிழ் மகன் முத்துகுமாரின் 8 ஆவது ஆண்டினையும் நினைவுகூர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் பணிமனையினாலும், திறான்சி தமிழ்ச்சங்கத்தாலும் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி நகரத்தில் மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுச்சுடரினை திறான்சி தமிழ்ச்சங்கத்தலைவர் திரு.பாபு அவர்கள் ஏற்றி வைக்க தளபதி கிட்டு அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கைகளுக்கும், ஈகைச்சாவைத்தழுவிக் கொண்ட தோழர் முத்துக்குமார் அவர்களுக்கும், தமிழீழ தேசவிடுதலைக்காக இக்காலப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 1993 ஆனையிறவு தவளைப்பாச்சல் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை இளங்கீரனின் சகோதரியும், 03.12.2007ல் கறிப்பட்டமுறிப்பு சமரில் வீரகாவியமான வீரவேங்கை யாழ்நம்பியின் சகோதரியும், திருகோணமலை கடற்பரப்பில் வீரமரணமடைந்த வீரவேங்கை ஆதவனின் சகோதரரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரும், கடற்கரும்புலி மேஜர்.ஈழவீரனின் சகோதரரும் ஏற்றி வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்த எழுச்சிபாடல்களை கலைபண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களுடன் திறான்சி தமிழ்ச்சங்க கலைபண்பாட்டுக்கழகக் கலைஞர்கள் வழங்கியிருந்தனர். தளபதி கிட்டு அவர்களின் நினைவாக திறான்சி தமிழ்ச்சங்க மாணவிகள் எழுச்சி நடனங்களை வழங்கியிருந்தனர். மாவீரர் நினைவு சுமந்த உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கிய உறுப்பினர் ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் மாலை 5.30 மணிக்கு வணக்க நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

0 Responses to பிரான்சில் இடம்பெற்ற வங்கக்கடலில் காவியமானவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com