Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளுடனும், சுவிஸ் தமிழ் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரினைத் தொடர்ந்து: தன்னினத்தின் துயர் நீக்க தீயில் கருவான வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான அன்றைய தினம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்து ஈகைச்சுடரேற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்திய இவ் பொங்கல் விழாவில் வரவேற்புரையைத் தொடர்ந்து எழுச்சி நடனங்கள், மேற்கத்தேய மற்றும் திரையிசை நடனங்கள், வீணாகானம், கரோக்கே வடிவிலான எழுச்சி, திரையிசைக் கானங்களுடன் எமது வீர வரலாற்றைக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இசைக்கச்சேரியானது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

இளம் கராத்தேக் கலைஞர்களின் ஆற்றுகை வெளிப்பாட்டுடன், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுன், காலத்திற்கேற்ப கருப்பொருளைக் கொண்;ட சிறப்புரை, கவிதை, பேச்சுக்களுடன் வேறுபல நிகழ்வுகளும் அரங்கை சிறப்பித்திருந்ததோடு, நிகழ்வுகளை வழங்கிய கலைஞர்களை எமது உறவுகள் அவர்களின் அரங்கம் நிறைந்த கைதட்டல்கள் மூலம் ஊக்குவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வின் இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் மகிழ்வுணர்வுடன் இனிதே நிறைவுபெற்றன.

தமிழர் திருநாள் 2017 நிகழ்வை நடாத்த பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இன உணர்;வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 Responses to சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2017

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com