Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதன் பின்னர், உயிரைக் காப்பாற்றுவதற்காக தப்பியோடி அரசாங்கத்திடம் வந்தவர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணி நுகேகொடையில் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு விநாயகமூர்த்தி முரளிதரன், தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “கருணா என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனிடன் உயிரை காப்பாற்றுவதாக கூறி தப்பி வந்த நபராகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்பதற்காக, அவர் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ஷதான்.” என்றுள்ளார்.

0 Responses to கருணா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பியோடியவர்: சரத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com