Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கைகள் எமக்கு ஏற்புடையதாகும் என்று கூற முடியாது. அதனால்தான் எமது அறிவுசால் உள்ளுர், சர்வதேச நிபுணத்துவப் பெருமக்களை அழைத்து எமக்கென நீரியல் கொள்கை ஒன்றை வகுக்க முற்பட்டுள்ளோம்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட நீர்வள முகாமைத்துவ ஆய்வரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது மாகாணம் பல விதங்களிலும் மற்றைய மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. நதிகள் அற்ற ஆனால் நற்குளங்க ளையும் கிணறுகளையும் கொண்டதொரு பிரதேசம். எனவே தனித்துவமான ஒரு நீரியல் கொள்கை எமக்கு அவசியமா கின்றது.

கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கையானது எமக்கு ஏற்புடையதாகும் என்று கூற முடியாது. அதனால்தான் எமது அறிவுசால் உள்ளுர், சர்வதேச நிபுணத்துவப் பெருமக்களை அழைத்து எமக்கென நீரியல் கொள்கை ஒன்றை வகுக்க முற்பட்டுள்ளோம்.

முதலில் கொள்கை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம். கலந்துரையாடலின் பின்னர் ஏதேனும் ஒரு துறை பற்றி அரசியல் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களே கொள்கைக்கு அஸ்திவாரமாகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையில் எதனை, ஏன், எவ்வாறு செய்யவேண்டும் என்று முடிவெடுப்பதே மேற்படி தீர்மானங்கள். மேலெழுந்தவாரியாக நாட்டுக்கென ஒரு பொருளாதாரக் கொள்கையை வகுக்கலாம்.

அதேநேரத்தில் நாட்டின் ஒவ்வொரு துறை சம்பந்தமாகவும் வகுக்கலாம். அதே போன்று மாகாண ரீதியாகவும் வகுக்கலாம். எவ்வாறு ஒரு துறை சம்பந்தமாக அபிவிருத்தி நடைபெறவேண்டும், சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற அனைத்தினதும் வடிவமைப்பு கொள்கையினுள் அடங்கும்.

மத்திய அல்லது மாகாண அரசாங்கம் கொள்கையை வகுத்த பின் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு அந்த ந்த அரச, மாகாண திணைக்களங்களுக்குண்டு.

ஆனால் சில நேரங்களில் கொள்கைக்கும் சட்டத்திற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படலாம். ஆகவே நாங்கள் கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சில தட வைகளில் சட்டத்தை மாற்ற வேண்டியிருக்கும். சில வேளைகளில் கொள்கையை மாற்ற வேண்டிவரும்.

ஒரு நாட்டின் அல்லது மாகாணத்தின் அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நோக்குகளின் பிரதிபலிப்பாகவே கொள்கை இருக்கும். எனவே கொள்கைகளாவன சமூக, அரசியல், பொருள்.” என்றுள்ளார்.

0 Responses to கொழும்பில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு பொருத்தமென்று கூறமுடியாது: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com