ஒவ்வொரு நாளும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக அதிருப்தி வெளியிட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதிலும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் அரசியல் கைதிகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே இச்சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ள கைதிகள், தம்மையும் மனிதர்களாகவும் மானமும் உணர்வும் உள்ளவர்களாகவும் மதித்து இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; அதிருப்தி வெளியிட்டு ஜனாதிபதிக்கு கடிதம்!