Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்துக்கு நிரந்தரமாக நீதிபதி நியமிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி உறுதி கூறினார்.

முதல்வர் நாராயணசாமி உரிமையியல் நீதிமன்றங்கள் திருத்த சட்ட முன்வரைவை புதன்கிழமை பேரவையில் தாக்கல் செய்து பேசுகையில்,:தற்போது காரைக்கால், மாஹே, ஏனாம் சார்பு நீதிமன்றங்களிலும், புதுச்சேரி சார்பு நீதிமன்றங்களிலும் ரூ.5 லட்சம் மதிப்பிற்கு மேல் உள்ள சிவில் வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பின்னர் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதை நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது.இதன் மூலம் காலதாமதம் குறைக்கப்படும். நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். முதியோர்கள் மற்றும் மகளிருக்கான தனி நீதிமன்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும்,அசனா (அ.தி.மு.க.): காரைக்கால் நீதிமன்றத்தில் வாரம் ஒரு நீதிபதி உள்ளார். நிரந்தரமான நீதிபதியை நியமிக்க வேண்டும்.

லட்சுமிநாராயணன் (காங்கிரஸ்): தமிழகத்தில் மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது அந்த மாவட்டங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுபோல் புதுச்சேரி மாவட்ட நீதிபதி பணியிடங்கள் நிரப்பும்போது புதுச்சேரி வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி: காரைக்காலில் நிரந்தர நீதிபதி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி நீதிபதி பணியிடங்கள் நிரப்பும்போது புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தில் பதிவு செய்து வழக்குரைஞராக பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்படும்.

வழக்குரைஞர்கள் வைப்பு நிதியாக ரூ.10 லட்சம்தான் கேட்டனர். ஆனால் ரூ.20 லட்சம் தர உள்ளோம். அதுபோல் இளம் வழக்குரைஞர்களுக்கான நிதியுதவி ரூ.2500 கேட்டார்கள், அரசு ரூ.3000 தர முடிவு செய்துள்ளது என்று கூறினார். பின்னர் உரிமையியல் நீதிமன்றங்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

0 Responses to காரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் முதல்வர் உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com