வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாகவே இந்தப் போராட்டம் தொடர்கின்றது.
இந்த நிலையில், போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு போராட்டக்காரர்கள் கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
அதில், “தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால்எமது உறவுகள் கடத்திச்செல்லப்ப ட்ட மையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.
அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்ளுர் மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகள், ஜனா திபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச சமுகம் என்று சகல தரப்புகளிடமும் முறையிட்டும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், சாத்வீக ரீதியாக சகல கவனவீர்ப்பு மற்றும் அழுத்த போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை.
ஆகவே எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? உயிருடன் இருந்தால் அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு எங்கே புதைக்கப்பட்டு ள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின் அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். குறித்த கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது!