Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மகிந்த தரப்பு மீண்டும் ஆட்சியை பிடிக்க பிரதான காய்நகர்த்தலாக புரட்சியின் ஓர் ஆரம்பம் எனும் நுகேகொட கூட்டத்தினை நினைத்திருந்தனர், அதை நடத்தியுமிருந்தனர்.

மாபெறும் வெற்றியை தரும் என எதிர்ப்பார்த்த மகிந்த தரப்பிற்க அது பாரிய தோல்வியாகவே அமைந்ததாக கூறப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இந்த கூட்டத்திற்கு மகிந்தவின் அரசியல் பங்காளி விமல் வீரவன்ச வருகைத் தரவில்லை என்றாலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மேடையில் பிரசன்னமானவர் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்.

நுகேகொடையில் மேடை ஏறிய கருணா ஆற்றிய உரை வெளிப்படையாக மகிந்தவிற்கு ஆதரவு கொடுக்கும் உரையாக நோக்கப்பட்டாலும் கூட அவரது உரை உள்ளர்த்தம் மிக்கதாகவே நோக்கப்படுகின்றது.

முதலாவதாக உரையாற்ற வரும் போது “தான் சிங்களத்தில் உரையாற்றவே விரும்பியதாகவும் ஆனால் மகிந்த கூறியதற்கு அமையவே தமிழில் உரையாற்றுகின்றேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் அவர் தன் உரைக்கு தான் பொறுப்பல்ல மகிந்தவே பொறுப்பு என்பதைக் கூற முற்படுகின்றாரா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

அதேபோன்று விடுதலைப்புலிகள் உலகின் சக்தி வாய்த அழிக்க முடியாத படை. அதனை அழித்தது மகிந்தவே, அந்தப் பெருமை அவருக்கே சேரும் எனவும் தெரிவித்தார்.

► வீடியோ இங்கே..

இவற்றின் மூலம் தமிழ் மக்களிடையே ஓர் விரோதியாக வர்ணிக்கப்படும் கருணா விடுதலைப்புலிகள் தொடர்பில் இன்றும் அச்சத்தில் இருக்கின்றாரா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

தனது பங்களிப்பு இல்லை என தான் தப்பிக் கொள்ளவே அவர் மகிந்தவின் கருத்திற்கு அமையவே பேசுகின்றேன். என மேடையில் தெரிவித்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

அதேபோன்று நுகேகொடை மேடையில் கருணா மகிந்தவை புகழ்ந்து தள்ளியதோடு “வடக்கிற்கு பாரிய சேவைகளை செய்தவரே மகிந்த, அதனால் அவர் பின்னால் செல்ல வேண்டியது எம் கடமை” என்றார்.

உற்று நோக்குகையில் சிங்கள மக்கள் ஒன்று திரண்ட கூட்டத்தில் தமிழில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

என்றாலும் தமிழ்மக்களுக்கு மகிந்தவின் பலம் பற்றி கூறவும், தமிழ் அரசியல் தலைவர்களை மகிந்தவுடன் இணைந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கவும் பேசிய பேச்சாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் கருணா ஏற்கனவே மரணபயத்தில் ஓடி ஒழிந்தவர், அவருக்கு அடைக்கலம் கொடுத்து காத்தவர் மகிந்த ராஜபக்சவே. இதன் காரணமாக அவரின் அம்பாகவே இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். என்பதை தெளிவு படுத்துகின்றது கருணாவின் மேடை உரை.

என்றாலும் இன்றும் அவர் மரணபயத்தில் இருக்கும் காரணத்திற்காகவே முழுப் பொறுப்பும் மகிந்தவையே சாரும், யுத்த வெற்றிக்கு மகிந்தவே காரணம், எனது உரையும் அவர் கூறி பேசியதே என தெரிவித்து விட்டு உரையாற்றி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் ஒருபக்கம் விடுதலைப்புலிகளிடம் இன்றும் அவர் கொண்டுள்ள அச்சத்தால், மறுபக்கம் தமிழ் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே நுகேகொடை மேடையில் கருணாவின் உரை அமைந்ததாக கூறப்படுகின்றது.

0 Responses to விடுதலைப்புலிகள் மீதான அச்சத்தால் மரண பயத்தில் கருணா விடுக்கும் எச்சரிக்கை?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com