மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமானக் கட்டண நிலுவைத் தொகை ரூ.119.70 கோடியை ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு பிரதமர் அலுவலகம் செலுத்தியது.
பிரதமராக பதவியேற்ற பின், நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான விவரங்களைக் கோரி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முன்னாள் கடற்படை வீரர் லோகேஷ் பத்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு, பிரதமர் அலுவலகம் பதில் அளித்திருந்தது.
அதில், மோடி இதுவரை 27 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாகவும், ‛ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு, 8 பயணங்களுக்கான கட்டண தொகை ரூ.119.70 கோடி செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, ‛ஏர் இந்தியா'வுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனே செலுத்தக் கோரி, தலைமை தகவல் ஆணையத்தில் பத்ரா மேல்முறையீடு செய்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர்,
பிரதமரின் பயணக் கட்டணங்கள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்துடன் தொடர்புடையது எனவும், எனவே அதனை விரைவில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மேற்கொண்ட பயணத்துக்காக, ‛ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய, விமானப் பயணக் கட்டண நிலுவைத் தொகை ரூ.119.70 கோடி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமானக் கட்டண நிலுவைத் தொகை ரூ.119.70 கோடி: ஏர் இந்தியா