குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை நேற்று புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.
குற்றவாளி ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள தண்டனை இடைநிறுத்தப்பட்டாலும், அக்குற்றவாளி மீது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட பிறிதொரு தண்டனை இருக்குமாயின், தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் அவரை நீதிமன்ற உத்தரவின்பேரில் தொடர்ந்தும் பொலிஸ் கண்காணிப்பில் வைக்கும் வகையில் குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான அங்கீகாரமே வழங்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அமைச்சரவை அங்கீகாரத்தை தொடர்ந்து நீதி அமைச்சர் அதனை விரைவில் வர்த்தமானியில் பிரசுரிப்பதுடன் பாராளுமன்ற அனுமதிக்காக முன்வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
இதேவேளை, சட்டவாக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய குற்றங்களுக்காக விரல் அடையாளங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் குற்றத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது குற்றத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களின் பட்டியலுக்காக மட்டுமே விரல் அடையாளங்களைப் பெற்றுக்கொள்ள கூடியதாகவுள்ளது.
சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் விரல் அடையாளங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று தன்னால் ஏற்கனவே அமைச்சரவைக்குப் பத்திரமொன்று முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இம்முறை அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் அதிகரித்து வரும் புதிய குற்றங்கள் காரணமாக இச்சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டிய அமைச்சர், குற்றவாளிகளின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அவர்களை கண்காணிப்பதனை இலகுபடுத்துவதற்குமாகவே விரல் அடையாளங்கள் பெறவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அமைச்சரவை அனுமதி!