Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பௌத்த மகா சங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் அனைத்து கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாரகன்பிட்டி ஸ்ரீலங்கா ராமன்ய மகாநிகாயவின் சங்க தலைமை அலுவலகத்தை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “இந்நாட்டின் பௌத்த கலாசாரம் மற்றும் வரலாற்றை ஆய்வுசெய்கின்ற போது ஸ்ரீலங்கா ராமான்ய நிகாய சாசனத்திற்கும் சமூக மற்றும் தேசிய ரீதியிலும் செய்துள்ள பணிகள் உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மகா சங்கத்தினரின் ஆலோசனைகளின் பேரில் திரிபீடக கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to மகா சங்கத்தின் வழிகாட்டுதலில் அரசாங்கம் பொறுப்புக்களை நிறைவேற்றும்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com