ஒற்றையாட்சியைப் பிளவுபடுத்தி பொலிஸ் அதிகாரங்களுடன் தனித்தனிப் பிராந்தியங்களாக ஆட்சி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், இலங்கையின் 70வது சுதந்திர தினத்தின் போது நாடு முழுமையாக இருக்குமா?, என்கிற கேள்வி எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “சுதந்திர தின நிகழ்வானது எமக்கு கிடைத்த சுதந்திரம் மற்றும் சுயாதீன தன்மை தொடர்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதியவர்களால் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. ஆனால் இந்த அரச தலைவர்களின் செயற்பாட்டினை பார்க்கையில் 70வது சுதந்திர தினத்தில் நாட்டில் எது மிச்சமாக இருக்கப்போகின்றது என தெரியவில்லை.
குறிப்பாக நாட்டு வளங்கள் அனைத்தையும் தற்போது வெளிநாடுகளுக்கு விற்று வருகின்றார்கள். அத்துடன் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்றவற்றை அந்த காலத்தில் அந்நிய நாடுகள் விட்டுவிட்டு சென்றவற்றை எல்லாம் தற்போது வெளிநாட்டவர்களுக்கு விற்கவா?
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்டின் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பவற்றை பேச்சுவார்த்தையின் மூலமாகவாவது தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளது. ஆர்ப்பாட்டம், பணிப் பகிஷ்கரிப்பு என்பன நாளுக்கு நாள் இரண்டிரண்டாக அதிகரித்து வருகின்றது.
இன்று நாட்டில் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை. நான் ஆரம்பித்த கொழும்பு – கண்டி அதிவேக பாதைக்கு அருகில் மீண்டும் அடிக்கல் நாட்டி அபிவிருத்திப் பணியை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எனக்கு ஏசிக் கொண்டே இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to எழுபதாவது சுதந்திர தினத்தின் போது நாடு முழுமையாக இருக்குமா?; மஹிந்த கேள்வி!