பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் விரைவில் பெரிதாக வெடிக்கும் என தெரிகிறது.
இதுபற்றி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் கூறி இருப்பதாவது,: 'முதல்வருக்கும் சசிகலா குடும்பத்துக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருகிறது. இந்த மோதல் இப்போது பகிரங்கமாக தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு சட்டசபை இரங்கல் தெரிவித்தது. அந்த தீர்மானம் மீது அனைத்து கட்சி தலைவர்கள் பேசினர். முதல்வர் நீண்ட நேரம் பேசினார்.
ஆனால் முதல்வரின் பேச்சை அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் முதல் பக்கம் பிரசுரிக்கவில்லை. மாறாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சை அது பிரதானமாக முதல் பக்கம் பிரசுரித்து இருந்தது. இந்த பத்திரிகை சசிகலாவால் நிர்வகிக்கப்படுகிறது.
இரங்கல் தீர்மானம் ஜெயலலிதாவுக்கானது என்றாலும், அதன் மீது பேசிய அதிமுகவினர் அனைவரும் சசிகலாவை பாராட்டி பேச தவறவில்லை. எல்லோரும் அவருக்கு நன்றி கூறி பேசினர். ஆனால் முதல்வர் ஓபிஎஸ் ஒரு தடவைகூட சசிகலா பெயரை சொல்லவே இல்லை.
மாறாக, சசிகலாவின் கணவன் நடராஜனை ஓபிஎஸ் மறைமுகமாக கண்டித்தார். தஞ்சையில் பொங்கல் விழாவில் பேசிய நடராஜன், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை நாந்தான் மீட்டு கொடுத்தேன் என சொல்லி இருந்தார்.
இதற்கு காட்டமாக சட்டசபையில் பதில் அளித்த ஓபிஎஸ், “இரட்டை இலை சின்னத்தை மீட்ட பெருமையெல்லாம் முழுக்க முழுக்க ஜெயலலிதாவையே சேரும். வேறு யாருக்கும் அதில் பங்கு கிடையாது” என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்தார்.
இதை கேட்டு சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் நடப்பதை அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் ஊர்ஜிதம் செய்தார்.
அரசுப் பதவி வகிக்கும் சீனியர் அதிகாரிகள் உட்பட பல பேர் தினமும் நடராஜன் வீட்டுக்கு படையெடுத்து போய் கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சசிகலா மூலமாக கோப்புகள் முதல்வருக்கு வருகின்றன. சசிகலா அனுப்பியதாக நேரிலும் வருகின்றனர். அவர்கள் சொல்வதை பன்னீர்செல்வம் பொறுமையாக கேட்டுக் கொள்கிறார். அதே மாதிரி சசிகலா மூலம் நடராஜன் கொடுத்து அனுப்பும் மனுக்களையும் படிக்கிறார். ஆனால் அவர்கள் கேட்பது போல ஒரு முடிவும் எடுப்பது இல்லை” என்று அந்த தலைவர் மேலும் தெரிவித்தார்.' இவ்வாறு டைம்ஸ் செய்தி கூறுகிறது.
சசிகலா குடும்பத்தினரின் இழுத்த இழுப்புக்கு வளையாமல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நிர்வாகம் நடத்த பன்னீர்செல்வம் துணிந்து விட்டார் என்ற உண்மை மன்னார்குடி குடும்பத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

0 Responses to ஓ.பன்னீர் செல்வம்- சசி மோதல் முற்றுகிறது?: டைம்ஸ் ஆஃப் இந்தியா!