Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வர் ஜெயலலிதாவின் ஆடிட்டர், சசிகலா டீம் எந்த உயிலைத் தேடிக் கொண்டிருந்ததோ அந்த உயிலோடு போய் மோடியிடம் சரண்டர் ஆகி விட்டார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. 

2011 ஆம் ஆண்டே தனது சொத்துகள் முழுமையாக எழுதி முடித்த ஜெயலலிதா, அந்த ‘நம்பிக்கைக்குரிய பத்திரிகை ஆசிரியர் மூலமாக ஆடிட்டரிடம் கொடுத்தார்.சொத்துக் குவிப்பு வழக்கு தீவிரம் அடைந்த நிலையில் உயிலை வெளியிட்டால் மேலும் சிக்கல் வரும் என்று ஜெயலலிதா கருதினார்.

அவர் சசிகலாவை நம்பவே இல்லை என்கிறது அந்த புலனாய்வு வார இதழ். ஆனால், சசி டீமிற்கும் தெரியாது ஜெயலலிதா உயில் யாரிடம் இருக்கிறது என்பது.மறைந்த ஆசிரியரும் யாரிடமும் லீக் செய்யவில்லை. ‘அந்த’ ஸ்ரீரங்கத்து ஆடிட்டர் தனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்பதை அறிந்து பிரதமர் மோடியிடம் தஞ்சம் அடைந்து உயிலை ஒப்படைத்து விட்டார் என்கிறது அந்த பத்திரிகை.

சரி பிரதமரும் ஏன் அமைதியாக இருக்கிறார் என்றால் சொத்துக் குவிப்பின் வழக்கின் தீர்ப்பு எந்த நேரமும் வெளி வரலாம்.அப்படி வந்த பின் யாருக்கு ஜெ.,வின் சொத்துகள் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய் விடும்.

அதே நேரம் சசிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது அந்தப் பத்திரிக்கை. சசி டீமிற்கு ஆடிட்டர் சரண்டர் விஷயம் தெரிய வர அலறி விட்டார்கள்.எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்று திகிலடைந்து கிடக்கிறதாம் தற்போதையை ஆக்கிரமிப்பு போயஸ்.வட்டாரம்.

0 Responses to மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயில் மோடி கையில்?: சசிகலா அடுத்து அரெஸ்ட்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com