Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெரினா வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் தலைவராக ஓய்வு
    பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் மெரீனாவில்
போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் கடைசி நாளில் மெரீனாவில் வன்முறை
சம்பவங்கள் நடைபெற்றன. இந்த வன்முறைக்கு காவல்துறையினரே காரணம் என்று
சொல்லப்பட்டு வரும் நிலையில், கூட்டத்தில், சமூக விரோதிகள் கலந்து
இருந்தனர் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி
தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்
செல்வம் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.அதன்படி, வன்முறை சம்பவம்
தொடர்பான விசாரணைக் குழுவுக்கு ஓய்வுப்பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை
வகிப்பார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

0 Responses to மெரினா வன்முறை:விசாரணை குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com