Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திண்டுக்கல்லில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக ஹோட்டல் ஒன்றில்
கோக், பெப்சி இனி விற்பனை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது.
அதோடு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக பார்சல்களை
பாத்திரத்தில் வாங்கினால் தள்ளுபடி என்றும் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. மாணவர்கள் போராட்டம்,
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை மட்டும் கொண்டு வரவில்லை. இத்தனை நாள்
தனித்தனி தீவுகளாக வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களை சகோதர உணர்வால்
பிணைத்திருக்கிறது. பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் மீதான மாணவர்களின்
அக்கறை பட்டி தொட்டியெங்கும் பரவிக்கிடக்கிறது.
நாட்டு மாடுகளின் நன்மை பற்றியும், கலப்பின மாட்டு பாலின் தீமைகள்
பற்றியும் சிறுவர்கள் வரை விளக்கமாகப் பேசுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக,
பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களையும் தமிழ்நாட்டில் இருந்து
விரட்டுவதற்கான முயற்சிகளும் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் முன்னோட்டமாக, மார்ச் ஒன்றாம் தேதி முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட
அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகர்
சங்கங்கள் அறிவித்துள்ளன.இந்நிலையில், மாணவர் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்த
நேரத்திலேயே,தங்கள் உணவகத்தில் இனி பெப்சி, கோக் விற்பனை செய்ய மாட்டோம் என
அறிவித்தது திண்டுக்கல் பாலாஜிபவன் உணவகம்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அரசு பொதுமருத்துவமனை அருகே என
இரண்டு கிளைகளுடன் இயங்கும் பாலாஜிபவன் உணவகத்தில் பெப்சி, கோக்
பானங்களுக்கு பதிலாக உள்ளூர் தயாரிப்புகள், பழச்சாறுகள் விற்பனை
செய்யப்படுகின்றன. அத்துடன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில்,
பார்சல் வாங்கும் வாடிக்கையாளர்கள் பாத்திரம் கொண்டு வரும்படி அறிவிப்பு
செய்துள்ளார்கள். அப்படி பாத்திரம் கொண்டு வந்து பார்சல்
வாங்குபவர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடியும் உண்டு. இந்த
அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

0 Responses to திண்டுக்கல் பாலாஜிபவன் உணவகத்தில் பெப்சி, கோக் இல்லை: பார்சலை பாத்திரத்தில் வாங்கினால் தள்ளுபடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com