கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடலின் போதே, இந்த விபரங்கள் மாவட்டச் செயலக அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168.2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 973.5 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 667 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 185 ஏக்கர் காணியும், பூநகரியில் 592.7 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 71 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
இதில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 218 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 4 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 445 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 128 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 8 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 49 ஏக்கர் காணியும் பூநகரி பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 28 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 85.7 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 479 ஏக்கர் காணியும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தனியார் உறுதிக்காணிகள் 70.5 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 0.5 ஏக்கர் காணியும் காணப்படுகின்றன.
0 Responses to கிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில்; மாவட்டச் செயலகம் தகவல்!