Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் அணியொன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவையின் கட்டமைப்பினைப் பலப்படுத்தவதற்கு அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே, இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் முடிவில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் பேரவை மக்களுடைய இயக்கமாகும். அதனடிப்டையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகின்றது. பல வகைகளிலும் தங்களுடைய பங்களிப்பு பேரவையில் பெருமளவில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கிருக்கின்றது.

ஆகவே, இந்த மக்களை எங்களுடைய பேரவையில் இணைத்து ஒத்துழைக்கும் வகையில் சேவைகளை முன்னெடுப்பது எவ்வாறு என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் நாம் ஆரய்ந்துள்ளோம்.

மேலும், பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்றும் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம்.

தங்களின் காணாமல் போன உறவுகளை இராணுவத்தினர் முன்னிலையில் உறவினர்கள் கையளித்திருந்தார்கள். அப்படியிருந்தும்; அவர்களை கையேற்றதாக இராணுவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த நிலையில், போதுமான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அது சம்பந்தமாக போதிய விசாரணைகளை அரசாங்கம் நடத்தியதாக தெரியவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to மக்கள் அணியை உருவாக்க தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com