Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாடசாலைகளைச் சுற்றியுள்ள 500 மீற்றருக்குட்பட்ட பிரதேசத்தில் சிகரெட் விற்பனை செய்வதை தடைசெய்ய சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அதற்கு அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அமுல்படுத்தப்பட இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் தேகாரோக்கியமான நோய்களற்ற மாணவர் பரம்பரையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களை புகைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாடசாலைகளில் இருந்து 500 மீற்றர் பிரதேசத்திற்குள் சிகரெட் விற்பதை தடை செய்ய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கை எடுப்பதன் மூலம் சிகரெட் விற்பனை செய்வதை பலவீனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர் சமூகம் சிகரெட் பாவனையிலிருந்து ஒதுங்கி வருகிறது. இந்த நிலையில் புகையிலை கம்பனிகளின் கழுகுப் பார்வை பாடசாலை மாணவர்கள் மீது விழுந்துள்ளது.

இதனாலே பாடசாலைகளுக்கு 500 மீட்டர் அண்மித்த பிரதேசத்தில் சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்து அதனூடாக பாடசாலை மாணவர்களை சிகரெட் பாவனையிலிருந்து பாதுகாக்க முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

0 Responses to பாடசாலையைச் சுற்றியுள்ள 500 மீற்றருக்குள் சிகரெட் விற்பனைக்கு தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com