Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய முரண்பாடுகள் காணப்பட்டாலும் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முடியும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக மாட்டேன் என்று புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அதுபோல, இரா.சம்பந்தனை விட்டு விலகும் எண்ணமும் தற்போதைக்கு இல்லை. அவர் பாதையில் பயணிப்பதையே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தடுமாறும் தமிழ்த் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?” என்ற தலைப்பில், கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா விருந்தினர் விடுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் என்னால், முடிவெடுக்க முடியாது. என்னுடைய கட்சி சம்பந்தமாகவே முடிவெடுக்க முடியும். இருந்தாலும் எங்களுக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தவறுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன. ஏன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருக்கின்றீர்கள் என்ற கேள்வி எழுகின்றது.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அல்லது எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முடியும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக மாட்டோம் என்பதே அது.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ.வை விட்டு விலக மாட்டேன்: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com