Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக வர்த்தக வலய ஒப்பந்தம் தொடர்பில் நீடிக்கும் இழுபறிகளுக்கு தீர்வு காணும் நோக்கில், சீனாவின் மூன்றாம் நிலைத் தலைவர் ஒருவர் எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் உள்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவோடு செய்து கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இலங்கை மாற்றியமைத்துள்ளது.

இதனடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை காலம் 99 ஆண்டுகளில் இருந்து 50 தொடக்கம் 60 வரையான ஆண்டு காலத்துக்கு குறைத்தல், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னர் திரும்பக் கையளித்தல், குத்தகை உரிமையை 80:20 என்ற விகிதத்தில் இருந்து 60:40 வீதம் அல்லது 51:49 வீதம் எனக் குறைத்தல் மற்றும் துறைமுகத்தின் பாதுகாப்புக்கு இலங்கை பொறுப்புக் கூறும் என்ற வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றை சாதகமான முறையில் கையாள்வதற்காக சீன அரசாங்கத்தின் மூன்றாம் நிலை தலைமையிலான குழு அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ளது. இவர்கள் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் சந்தித்து அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்க உள்ளனர்.

0 Responses to அம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரம்; சீனாவின் மூன்றாம் நிலைத் தலைவர் இலங்கை வருகிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com