Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேற்கு பசுபிக் கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் இணைந்து இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இராணுவக் கூட்டுப் பயிற்சியினை ஆரம்பித்ததை அடுத்து நாம் அணுசக்தியால் இயங்கும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலை ஒரேயொரு ஏவுகணைத் தாக்குதலில் அழித்துக் கடலில் மூழ்கடிப்போம் என வடகொரியா சூளுரைத்துள்ளது.

அண்மையில் வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் யோ சங்கின் 105 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பியாங்யாங்கில் மாபெரும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அந்நாட்டு இராணுவத் தளபதி சோய் ரியாங் ஹே எமது தேசத்தின் மீது தொடுக்கப் படும் எந்தவித நேரடிப் போரையும் நாம் சந்திப்போம் என்றும் அணுவாயுதத் தாக்குதலுக்குக் கூட சரியான பதிலடி கொடுப்போம் என்றும் கூறியிருந்தார். இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் ஹார்ல் வின்சன் எனப்படும் மிகப் பெரிய போர்க் கப்பலை வடகொரிய கடற்பகுதிக்கு அனுப்பி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். மேலும் கொரியத் தீபகற்பத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் அமெரிக்காவின் ஹார்ல் வின்சன் கப்பலுடன் ஜப்பானின் சமிடரே, ஆஷிகரா ஆகிய கப்பற் படைக் கப்பல்களும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலை நாம் மூழ்கடிப்போம் என வடகொரியா அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மேலும் தனது நாட்டை விட்டு வெளியேற முயன்ற அமெரிக்கக் குடிமகன் ஒருவரை வடகொரியா கைது செய்திருப்பதாகத் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைதான நபர் வடகொரியாவில் கைதான 3 ஆவது அமெரிக்கக் குடிமகன் என்றும் சீனாவின் யான்பியான் பல்கலைக் கழக முன்னால் பேராசிரியர் என்றும் சில நிவாரணத் திட்டங்களுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதமாக வடகொரியாவில் தங்கி இருந்தவர் என்றும் தெரிய வருகின்றது. பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப் பட்டதாக யோன்ஹாப் என்ற தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

0 Responses to அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்க நாம் தயார்! : வடகொரியா சூளுரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com