ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை இராணுவ வீரர்கள் போன்று உடையணிந்த தலிபான் போராளிகள் சிலர் தொடுத்த மோசமான தாக்குதலில் ஆயுதம் தாங்காத குறைந்தது 140 இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இறந்த வீரர்களுக்கான தேசிய நினைவஞ்சலி நாள் என ஆப்கான் அரசு பிரகடனப் படுத்தியுள்ளதுடன் தேசியக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப் பட்டுள்ளன. மேலும் இறந்த வீரர்கள் அனைவரையும் அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டிகள் கூடப் பற்றாக்குறையாக இருப்பதாக ஆப்கான் மக்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 16 வருடங்களாக நீடித்து வரும் ஆப்கான் போரில் ஆப்கான் இராணுவத் தளம் ஒன்றின் மீது தலிபான்கள் தொடுத்த மிக மோசமான தனிப்பட்ட தாக்குதல் இது என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு அமைச்சர் அப்துல்லா ஹபிபி உட்பட சம்பந்தப் பட்ட இராணுவ அமைச்சர்கள் மற்றும் பிரதான தளபதிகள் என அனைவரும் பதவி விலக வேண்டும் என பொது மக்கள் மத்தியில் கடும் கோபம் வெளிப்பட்டுள்ளது.
15 வருடங்களுக்கு முன்னதாகத் தாம் ஆப்கானின் ஆட்சியில் இருந்து நீக்கப் பட்ட போதும் தாம் இன்னமும் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாகவே உள்ளோம் எனத் தலிபான்கள் இத்தாக்குதல் மூலம் இன்னொரு முறை நிரூபித்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க கண்காணிப்பு அமைப்பன சிகார் (SIGAR) இன் தகவல் படி 2016 ஆம் ஆண்டு மட்டும் ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலால் உயிரிழப்புக்கள் 35% வீதம் அதிகரித்துள்ளதாகவும் அவ்வருடம் மொத்தம் 6800 துருப்புக்களும் போலிசாரும் கொல்லப் பட்டுள்ளதாகவும் தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானில் ஆயுதம் தாங்காத இராணுவத்தினர் மீது தலிபான்கள் மோசமான தாக்குதல்! : 140 பேர் பலி