பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் நீடிப்பது தொடர்பிலான முடிவை அமெரிக்கா இன்னும் இரு கிழமைகளுக்குள் எடுக்கும் என சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய சூழலில் உலகளாவிய ரீதியில் மனித இனத்துக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் மிக முக்கியமானதான இந்த ஒப்பந்தம் தொடர்பில் சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இதுவரை எதுவுமே செய்யவில்லை எனவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது தேர்தல் பிரச்சார சமயத்தில் குறித்த பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்த போதும் அவரது நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் இந்த விவாகரத்தில் முரண்பாடு கொண்டுள்ளதால் டிரம்பினால் உடனடியாக இதனை அமுல் படுத்த முடியவில்லை.
எனினும் மே 26 மற்றும் 27 ஆம் திகதியளவில் நடைபெறவுள்ள G-7 மாநாட்டுக்கு முன்னதாக இந்த விவகாரத்தில் முடிவு எட்டப் படும் எனத் தெரிய வருகின்றது. அண்மையில் தான் பதவியேற்று 100 ஆவது நாள் நிறைவை முன்னிட்டு பென்சில்வானியாவில் உரையாற்றிய டிரம்ப் காலநிலை மாற்ற விவகாரத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய அனைத்து சக்திகளும் செல்வாக்கு செலுத்தும் போதும் இதில் தீர்வைக் காண இதுவரை அமெரிக்கா மட்டுமே பில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து வருவதாகக் குற்றம் சாட்டியதுடன் இன்னும் இரு கிழமைகளில் தான் இது தொடர்பில் முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாகவும் அதன் பின் என்ன நடக்கின்றது எனக் கூர்ந்து அவதானிப்போம் எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு ஆதரவாக ஆயிரக் கணக்கானவர்கள் பேரணி நடத்திய சில மணித்தியாலங்களுக்குள் அதிபர் டிரம்ப் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பிலான இந்தியாவின் செயற்பாடுகள் அமெரிக்காவின் சக்தி மாற்ற நிறுவனங்களில் மிகப் பெரிய புதிய சந்தையை ஏற்படுத்தக் கூடியது என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் விவாதித்திருப்பதும் இச்சமயத்தில் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பான முடிவு வெகு விரைவில்.. : டொனால்ட் டிரம்ப்