Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள கடற்படையினர் ஒரு தொகுதி காணிகளை விடுவிப்பதற்கு இன்று சனிக்கிழமை இணங்கியுள்ளனர்.

முள்ளிக்குளத்தில் வாழ்விடங்கள், மத வழிபாட்டிடங்கள் உள்ளடங்கலாக 300 ஏக்கர் நிலம் உட்பட 600 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து கடற்படையினர் முகாமிட்டுள்ளனர்.

குறித்த பகுதியை விடுவிப்பது தொடர்பில் குறித்த கடற்படை முகாமில் கடற்படைத் தளபதி, மாவட்டச் செயலக அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் ஆயர் இல்லப் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுக்களின் போது, 27 வீடுகள் அமைந்துள்ள காணிகளைத் தவிர ஏனைய பகுதி காணிகளை விடுவிக்க கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

0 Responses to முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு தொகுதி விடுவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com