Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துருக்கி நாட்டில் விக்கிபீடியா இணையத் தளத்துக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விக்கிபீடியா இணையத் தளம் சர்வதேச அரங்கில் துருக்கிக்கு எதிரான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதாகவும் துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

முக்கியமாக தீவிரவாதத்துக்கு ஆதரவாக விக்கிபீடியா பதிவு செய்துள்ள கருத்துக்கள் எனத் துருக்கி அரசு கருதும் தகவல்களை நீக்குமாறு விடுக்கப் பட்ட வேண்டுகோளுக்கு விக்கிபீடியா செவி சாய்க்காததால் அந்த இணையத் தளத்துக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது. BTK எனப்படும் துருக்கியின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழிநுட்ப அதிகாரப் பிரிவினாலேயே சனிக்கிழமை முதல் விக்கிபீடியா இணையத் தளம் முடக்கப் பட்டுள்ளது. இதற்கான மிகத் திருத்தமான காரணத்தை இந்த அமைப்பு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம் சமீபத்தில் துருக்கியில் அரசினால் முறியடிக்கப் பட்ட இராணுவப் புரட்சிக்குத் துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் நீதித்துறை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 4000 அரச ஊழியர்களும் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

மேலும் நாளை திங்கட்கிழமை துருக்கி அதிபர் எர்டோகன் இந்தியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இப்பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்துக்கு எதிரான போர் மற்றும் இந்தியாவின் NSG உறுப்பினராதல் தொடர்பில் ஆதரவளித்தல் ஆகிய விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப் படவுள்ளது. இந்த ஒருநாள் விஜயத்தின் போது எர்டோகன் நியூடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to விக்கிபீடியாவுக்குத் தடை விதித்தது துருக்கி அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com