Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிலிப்பைன்ஸுக்குத் தெற்கே சரான்கனி மாகாணத்தில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு 7.2 ரிக்டர் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. மிண்டானோ பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியதால் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப் பட்டது.

நில நடுக்கம் தாக்கிய போது தூக்கத்தில் இருந்த மக்கள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும் இப்பூகம்பம் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் சிலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியான போதும் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. 10 விநாடிகள் மிக வலிமையாக இந்த நிலநடுக்கம் உணரப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. Rings of Fire எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் ஒரு வருடத்தில் நில நடுக்கம் அதிக தடவை தாக்கப் படும் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 1990 ஆம் ஆண்டு 7.7 ரிக்டரில் பிலிப்பைன்ஸைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2000 பேர் உயிரிழந்து இருந்தனர்.

0 Responses to பிலிப்பைன்ஸில் 7.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப் பட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com