Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2007 ஆம் ஆண்டு பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய டோனி பிளேயர், ஐரோப்பிய யூனியனில் இருந்து அந்நாடு வெளியேற ஆதரவளிக்கும் Brexit என்ற அமைப்புக்கு எதிரான செயற்படும் அமைப்புடன் இணைந்து மீண்டும் பிரிட்டன் அரசியலில் இணையத் தயாராக உள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

63 வயதாகும் முன்னால் தொழிலாளர் கட்சித் தலைவரும் பிரதமருமான டோனி பிளேயர் ஜூன் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்றும் ஆனால் 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிராகத் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவேன் எனவும் டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். தற்போதைய பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயின் கொள்கைப் படி ஐரோப்பிய யூனியனின் தனித்த சந்தையில் இருந்து நீங்கி சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது பிரிட்டனை அதன் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து புறக்கணிக்கப் படுவதற்கு சமம் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான டோனி பிளேயர் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போது அதனுடன் இணைந்து பிரிட்டனும் போரில் ஈடுபட எடுத்த முடிவானது பிரிட்டன் மக்களிடையே கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சம்பாதித்து இருந்தது. எனினும் இவரது தலைமையில் பிரிட்டனின் 3 முக்கிய பொதுத் தேர்தல்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டோனி பிளேயர் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தில், இவ்வாறு கூறியுள்ளார். 'மாற்றத்தை அனுமதிக்கும் உலகம் ஒன்றில் நாம் வாழ்ந்து வருகின்றோம். எமது மக்கள் கலாச்சார அழுத்தங்கள், குடியகழ்வு, தமது சமூகத்தில் ஏற்படும் மாற்றம், பொருளாதார அழுத்தம் என்பவற்றின் மத்தியில் தமக்கு ஊழியம் கிடைக்கின்றதோ இல்லையோ தமது தொழிலின் தராதரம் குறித்தும் கடும் கவனம் செலுத்தி வருகின்றனர்.' என்றுள்ளார்.

0 Responses to பிரெக்ஸிட் எதிர்ப்பு அமைப்புடன் இணைந்து டோனி பிளேயர் மீண்டும் அரசியல் பிரவேசம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com