Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைத்துப் பெண்களும் புர்கா என்ற தலையை மறைக்கும் ஆடை அணிவது அவசியம் என்ற கட்டுப்பாடு நிலவும் சவுதி அரேபியாவுக்கு ஜேர்மனி சேன்சலரான ஏஞ்சலா மேர்கெல் புர்கா அணியாது விஜயம் செய்துள்ளார். அவரை சவுதி அரசரான சல்மான் ஏனைய மூத்த அதிகாரிகளுடன் மேற்கு நகரான ஜித்தாவுக்கு நேரில் சென்று வரவேற்றார்.

உலகின் பழமைவாத இஸ்லாமிய இராச்சியமான சவுதி அரேபியாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு விஜயம் செய்து வந்த மேற்குலக பெண்மணிகள் தமது தலையை மூடி புர்கா அணிந்தே சென்றிருந்தனர். எனினும் பிரிட்டன் பிரதமரான தெரேசா மே என்பவர் கூட சமீபத்தில் ரியாத் இற்கு வருகை தருகையில் சவுதி பெண்கள் பின்பற்றும் பாரம்பரிய ஆடைப் பழக்கத்தைத் தவிர்த்து உத்தியோகபூர்வ ஆடையிலேயே விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் தவிர அமெரிக்காவின் ஹிலாரி கிளிங்டன் மற்றும் முன்னால் அதிபர் ஒபாமாவின் துணைவியார் மிச்சேலே ஒபாமா ஆகியோரும் சவுதிக்கு உத்தியோக பூர்வ ஆடையிலேயே விஜயம் செய்திருந்தனர்.

சவுதியில் பெண்கள் பழமை வாத ஆடைப் பழக்கத்துக்கு அமைவாக உடம்பு முழுவதையும் மூடி தலையைச் சுற்றி புர்கா அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உட்பட அங்கு பெண்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை இருந்து வருகின்றது. இந்நிலையில் ஜேர்மனியில் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்கப் பட வேண்டும் எனவும் எமது நாட்டில் இதனை அனுமதிக்க முடியாது எனவும் மேர்கெல் சமீப காலமாக அழைப்பு விடுத்து வருகின்றார்.

கடந்த வாரம் ஜேர்மனியில் சிவில் சேவை, நீதித்துறை மற்றும் இராணுவம் ஆகிய பிரிவுகளில் பணி புரியும் பெண்கள் தமது முகத்தை மூடி மறைத்தோ அல்லது புர்கா மற்றும் நிகாப்ஸ் ஆகியவற்றை அணிவதற்கோ பூரணத் தடை விதிக்கப் பட வேண்டும் என அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகளில் குழப்ப நிலை காரணமாக வெளியேறும் மக்களுக்கு இன்னமும் அதிக மனிதாபிமான உதவிகளைச் செய்ய வளைகுடா நாடுகள் முன்வர வேண்டும் என ஜேர்மன் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் சவுதி அரசருக்கு அழுத்தம் தெரிவிப்பார் என எதிர் பார்க்கப் படுகின்றது.

சமீப காலமாக சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குழப்ப நிலை காரணமாக வெளியேறும் இலட்சக் கணக்கான அகதிகளுக்கு ஜேர்மனி புகலிடம் அளித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜேர்மனி சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் சவுதி பயணத்தை முடித்து விட்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு (UAE) விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

0 Responses to புர்கா என்ற ஆடைக் கட்டுப்பாடு இன்றி சவுதி அரேபியாவை வந்தடைந்த ஏஞ்சலா மேர்கெலை வரவேற்றார் சவுதி அரசர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com